வவுனியாவில் இன்று முன்னாள் போராளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, பறனாட்டகல் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் இன்றையதினம் அதிகாலை 12 மணியளவில் தனது மனைவியுடன் உரையாடிவிட்டு உறங்குவதற்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் உறங்கிய சில நிமிடங்களில் அவரிடம் மாற்றம் ஒன்றை உணர்ந்த மனைவி, அவரை வந்து எழுப்பியபோதும் அவர் எழுந்திருக்கவில்லை.
இந்நிலையில் குறித்தநபரின் மனைவி அயலவர்களை அழைத்துள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியான 35 வயதுடைய பேரின்பநாதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சில நோய்கள் காரணமாக குறித்தநபர் மருத்துவ சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
