பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புல்மோட்டையிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார அமைப்பாளர்கள், கட்சியின் முகநூல் போரிளிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

எதிர்வரும் 30ம் திகதி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிண்ணியா கிராமக்கொட்டுவ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அது தொடர்பிலும் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதுடன், புல்மோட்டையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேர்தல் நடவடிக்கை சம்மந்தமாக அதிக கவனம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய கலந்துரையாடலில் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் தற்போதைய பணிப்பாளர் ஆதம்பாவா தௌபீக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.