கொழும்பில் இளைஞர், யுவதிகளின் மோசமான செயல்! சுற்றிவளைத்த பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு, தெஹிவளை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தில் 100 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர் போதைப்பொருளுடன் இருந்ததாகவும், ஏனையவர் விருந்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, ஹோட்டல் சுற்றிவளைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.