ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவாக கல்முனையில் பிரசார பணி தீவிரம்

Report Print Varunan in சமூகம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஆதரவு தெரிவித்து தீவிர பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பின் தலைவர் ரி.ஹரிபிரதாப் தலைமையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அரசயடி அம்மன் கோவிலடி, பாண்டிருப்பு சந்தை, தாளவட்டுவான் சந்தி, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் பணியினை கட்சியின் அம்பாறை மாவட்ட ஆதரவாளர் நிமால் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.