சம்பந்தன், சுமந்திரன் சென்ற வாகனம் மீது செருப்படித் தாக்குதல்! தமிழ் தாயொருவர் ஆவேசம்

Report Print Vethu Vethu in சமூகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற வேளையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகாப்பு வாகனத் தொடரணியில் வெளியேறியிருந்தனர்.

இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அதிகளவு பொலிஸார் மூலம் வாகனத் தொடரணியை நெருங்காது தடுத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் தனது செருப்பை கழற்றி வாகனத்தொடரணி மீது எறிய முற்பட்டபோது அவரை அங்கிருந்த பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

பொலிஸாரினால் தடுக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட குறித்த பெண், தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக திட்டித் தீர்த்தார்.