மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்களா..?

Report Print Ajith Ajith in சமூகம்

மலேசியாவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதைக்கும் அச்சுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டை மலேசிய உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ முகைதீன் யாசீன் மறுத்துள்ளார்.

தமக்கு மலேசிய காவல்துறை அதிபர் டான் ஸ்ரீ அப்துல் ஹமீட்டின் அலுவலக தகவல்களின்படி சித்திரவதைகள் எதுவும் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்தக்குற்றச்சாட்டை சுமத்துபவர்கள் காவல்துறையில் முறையிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உரிய விசாரணைகள் இன்றி எவ்வித குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ முகைதீன் யாசீன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 57வயதான பி சுப்பிரமணியம் மற்றும் 28வயதான ஏ கலைமுகிலன் ஆகியோரே தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர்களின் சட்டத்தரணிகளின் ஊடாக நேற்று முறையிட்டிருந்தனர்.