ரியன்ஸி எட்வேட்ஸ் நிதிச்சலவை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

ரியன்ஸி எட்வேட்ஸ் என்ற நிதிச்சலவையில் ஈடுபடுபவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருடன் உள்ள தொடர்பு குறித்து சாட்சியமளிக்க வருமாறு நிதிமோசடிகளுக்கு எதிரான முன்னாள் தலைவர் ரவி வைத்யலங்காரவின் மனைவி மற்றும் அவருடைய மகன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இவர்கள் இருவரும் நாளை 4ம் திகதியும், நாளை மறுநாள் 5ம் திகதியும் தமது அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

வைத்யலங்காரவின் மகன் அசேல ஜயம்பதி ராஜசுந்தர 52 மில்லியன் ரூபாய்களுக்கு கொள்ளுப்பிட்டியவில் ஒரு வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வீடு சூர்யா இன்டர்நெசனல் பிரைவேட் லிமிடெட்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக வைத்யலங்காரவின் மனைவி மேரி பெசீலிக்காகவும் செயற்படுகிறார்.இந்நிலையிலேயே அவருக்கும் விசாரணைக்கென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.