வவுனியாவில் மோட்டார்சைக்கிளை உடைத்து கொள்ளையடிக்க முற்பட்ட நபருக்கு நேர்ந்த கதி

Report Print Theesan in சமூகம்

வவுனியா வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை உடைத்து கொள்ளையடிக்க முற்பட்ட நபரொருவர் பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரின் மோட்டார்சைக்கிள் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது குறித்த மோட்டார்சைக்கிளின் பெட்டியை உடைத்து திருடுவதற்கு ஒருவர் முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.