போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு தண்டப்பணம் விதித்து உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவருக்கும் தலா 50,000 ரூபா வீதம் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புல்மோட்டை தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த மீரா சாஹிபூ பயாஸ் (30 வயது), கபீர் முகம்மட் இர்ஷாதீன் (30 வயது), ரஜப்தீன் முகம்மது நவ்பர் (34 வயது) மற்றும் வத்தளை, பலகல வீதியைச் சேர்ந்த நாகராஜா சத்குமார் நீதிராஜா மற்றும் சதீபன் நீதிராஜா ஆகியோருக்கே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.