எம்.சீ.சீ உடன்படிக்கை குறித்து அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் எம்.சீ.சீ உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அதில் அந்த நிறுவனத்தின் ஐரோப்பிய மற்றும் ஆசிய பிராந்திய உப தலைவர் பாத்திமா சுவர் மற்றும் இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கையெழுத்திட உள்ளனர்.

இந்த உடன்படிக்கையில் காணி மற்றும் போக்குவரது என இரண்டு திட்டங்கள் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையை கண்காணிக்க நாடாளுமன்றத்திற்கு சந்தர்ப்பம் உள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த உடன்படிக்கை மூலம் இலங்கைக்கு 480 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.