முடிவுக்கு வந்தது மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் : முக்கிய சூத்திரதாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலை

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை வவுனியா ஆச்சிபுரம் பகுதிக்கு மின்சார தொழில் நிமித்தம் கடமைக்கு சென்ற மின்சார சபை ஊழியர்கள் ஆறு பேர் மீது அப்பகுதியிலுள்ள ஒரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய சூத்திரதாரிகள் மூவர் நீதிமன்றத்தில் தமது சட்டத்தரணிகளுடன் இன்று முன்னிலையாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஏழிற்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய சூத்திரதாரி என்று மின்சார சபை ஊழியர்களினால் முறைப்பாடு செய்யப்பட்ட முக்கிய நபர் றஞ்சா உட்பட நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ள மூவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே முக்கிய சூத்திரதாரிகள் சரணடைந்துள்ளதையடுத்து கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டுவந்த பணிபுறக்கணிப்பு போராட்டம் இன்று முற்பகல் முதல் முடிவுக்கு கொண்டுவரபடப்டுளதாகவும் மின்சார சபை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.