யாழில் வர்த்தக நிலையத்தினை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர்!

Report Print Mohan Mohan in சமூகம்

யாழ்ப்பாணம் - குறுநகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றினை முற்றுகையிட்ட அதிரடிப்படையினர், வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை இன்றையதினம் கைது செய்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையத்தில் தடை செய்யப்பட்ட நைலான் வலைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அதிரடிப்படையினரால் குறித்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது தடை செய்யப்பட்ட 38 மீன்பிடி வலைகளை அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன், உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைதாகிய சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.