கண்டியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நபர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கண்டி நகரம் - வட்டுகொடபிட்டிய பகுதியில் தனியார் கட்டிடமொன்றில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக ஒருவர் எச்சரித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

குறித்த கட்டிடத்தின் உரிமையாளரே இவ்வாறு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது கட்டிடத்தை அவர் அண்மையில் தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்து, அதனூடாக பணம் பெற்றிருக்கின்றார்.

பெற்ற பணத்தை செலுத்த முடியாத நிலைக்குத் அவர் தள்ளப்பட்டதை அடுத்து கட்டிடத்தை குறித்த வணிக வங்கி முற்றுகையிட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்திற்கும், சங்கடத்திற்கும் உள்ளாகிய குறித்த நபர் கட்டிடத்தின் மேல் ஏறிச்சென்று உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார்.

பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு தற்போது பொலிஸார் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.