பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த நிலைமை

Report Print Steephen Steephen in சமூகம்

கேகாலையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டத்திற்கு சென்று விட்டு, பேருந்தில் திரும்பி சென்றுக்கொண்டிருந்த யுவதி ஒருவரை, அவருடன் சென்ற இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக ஹெம்மாத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

யுவதியின் தந்தை செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது மனைவியுடன் கூட்டத்திற்கு சென்ற மகள் இரவு 11 மணி வரை வீடு திரும்பவில்லை என யுவதியின் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

மனைவியும் மகளும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தந்தை தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த யுவதியை இளைஞர் ஒருவர், ஹெம்மாத்தகம, எல்பிட்டிய பாலவத்தகம பிரதேசத்தில் காட்டுப் பகுதி ஒன்றில் யுவதியை பேருந்தில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஹெம்மாத்தகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யுவதியை சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி மருத்துவ அறிக்கையை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.