விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

Report Print Mohan Mohan in சமூகம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்தையொட்டி சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மாவீரர் தினத்தையொட்டி, மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிரமதானப்பணிகள் முல்லைத்தீவு, விசுவமடு துயிலும் இல்லத்திலும் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிரமதான பணிகளில் மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் கலந்துகொண்டனர்.