ஜனாதிபதி வேட்டாளரின் பின்னணியில் இவ்வளவு உள்ளதா? வவுனியாவில் சுவரொட்டிகள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

உங்கள் ஜனாதிபதி வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தின் பின்னணியில் சாராயம் மற்றும் புகையிலை நிறுவனங்களின் பணம் உள்ளதா? என வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் வவுனியாவின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற 16ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் இச் சுவரொட்டியினை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.