மட்டக்களப்பில் விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - மாவடி வேம்பு பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவர் 50 வயதுடைய கிருஸ்ணப்பிள்ளை இராசேந்திரன் எனத் தெரியவருகின்றது.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் தப்பிச்சென்றுள்ளதுடன், பின்னர் குறித்த கார் வந்தாறுமூலையில் வைத்து பேருந்து ஒன்றுடனும் மோதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.