பிரச்சார மேடையில் தமிழில் பாடல் பாடிய தயாசிறி ஜயசேகர

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தமிழில் பாடல் பாடி தமது ஆதரவாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.

யாழ் - தெல்லிப்பளையில் இன்று, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பிரசாரக் கூட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, உரையாற்றிய பின்னர் தயாசிறி ஜயசேகர இசைக்குழுவினருடன் இணைந்து தமிழ் பாடல்களை பாடி தம் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.