உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்! சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்படட ஒரு தொகுதி சந்தேகநபர்களை தொடர்ந்தும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்முனை நீதிவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தது. இதன்படி 13 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இரண்டு கட்டங்களாக மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஒரு குழுவில் 7பேரும் மற்றும் ஒரு குழுவில் 6 பேரும் அடங்கியிருந்தனர்.