ஜனாதிபதியிடம் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை! காலி மறைமாவட்ட ஆயர்

Report Print Ajith Ajith in சமூகம்

ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பிலான குற்றவாளி சர்மந்த அந்தோனி ஜயமஹாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் தமது பெயர் பயன்படுத்தப்பட்டமையை காலி மறைமாவட்ட ஆயர் கண்டித்துள்ளார்.

தமது கோரிக்கையை ஏற்றே ஜயமஹா விடுதலை செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.

எனினும் இந்த பொதுமன்னிப்பு தொடர்பில் தாம் ஜனாதிபதியிடம் எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை என்று காலி ஆயர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சில பௌத்த பிக்குகளும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொண்டமைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் கைதிகளை விடுவித்து அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் விடுத்ததாக ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.