பாரிய சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் அழிப்பு!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - முரசுமோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம், கிராம அலுவலரின் அதிரடியால் அழிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முரசுமோட்டை வயல் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்பில் கிராம அலுவலருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, நேற்று பகல், சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கசிப்பு உற்பத்தி தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கினர்.

எனினும், பொலிஸார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் குறித்த பகுதிக்கு வருகை தராத நிலையில் தொடர்ந்தும் பல தடவைகள் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும், பொலிஸார் அந்த இடத்திற்கு வராத காரணத்தினால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பினர்.

இதனையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தியை கிராம அலுவலர் மற்றும் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து அழித்துள்ளனர்