தாய் வெளிநாட்டில்! இலங்கையில் மாணவி எடுத்த விபரீத முடிவு

Report Print Sujitha Sri in சமூகம்

கல்நேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலாகமுவ பிரதேசத்தில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் கல்நேவ மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த மாணவியே இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளார்.

மாணவியின் தாய் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், மாணவியான மகள் இளைஞரொருவருடன் காதல் தொடர்பு கொண்டுள்ளார்.

இதற்கு குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில் மனமுடைந்த மாணவி கிருமிநாசினியை அருந்தி தற்கொலை செய்து கொள்ளதாக தெரியவருகிறது.

மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.