கொழும்பு ரோயல் கல்லூரி வாக்களிக்கும் மத்திய நிலையத்தில் குழப்ப நிலை

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு ரோயல் கல்லூரியில் வாக்களிப்பு மத்திய நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 50 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு விஷமடைந்த காரணத்தினால் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமாகியமையே இதற்கு காரணம் என கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கல்லூரியில் கடமையில் இருந்த அனைத்து அதிகாரிகளும் சிகிச்சைக்காக வைத்தியசாலை வாட்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளையதினம் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், இன்று ஏற்பட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You My Like This Video