இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளரின் விளம்பர பதாதை

Report Print Kumar in சமூகம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில், ஒழுக்கமாக செயற்பாடுமாறு அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாதைகள், கட் அவுட்கள் உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களையும் அகற்றுவதற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்பாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் படம் பொறிக்கப்பட்ட பதாதை இன்றும் கூட அகற்றப்படாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்திற்கு சுமார் 300 மீற்றர் தூரத்தில் வாக்களிப்பு நிலையம் அமைந்துள்ள நிலையில் குறித்த பதாதையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.