போலி வாக்குச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்ல ஹம்பாந்தோட்டை தேசிய பாடசாலையில் நிறுத்தி வாகனத்தில் வாக்குச் சீட்டுக்கு இணையான சீட்டு தொகையுடன் ஒருவரை ஹம்பாந்தோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வாக்கு பெட்டிகளை எடுத்துச் சென்ற வானின் சாரதியான திஸ்ஸமஹாராமை பிரதேசத்தைச் சேர்ந்த ஹேவா சுதுஹகுரகே அல்பர்ட் என்ற 60 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாகனத்தில் முல்கிரியாகல தொகுதியின் இத்ததெலிய வாக்குச் சாவடிக்கு வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லப்பட இருந்தது.

வாக்கு பெட்டிகளை வழங்கிய பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் வாகனத்தை சோதனையிட்ட போது, வானின் முன்பக்க ஆசனத்திற்கு எதிரில் உள்ள பெட்டகத்தில் 58 வாக்குச்சீட்டுக்கள் இருந்துள்ளன.

இதனையடுத்து இது குறித்து அதிகாரி பொலிஸாருக்கு அறிவித்த பின்னர், வாக்குச்சீட்டுகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் குறித்து ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.