மூன்று மாதங்களுக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட மருத்துவர் சின்னையா சிவரூபன்

Report Print Steephen Steephen in சமூகம்

மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் நேற்று முன்தினம் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி பத்மசிறி பண்டார உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர்.

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க முயற்சித்தார் என்று பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தெற்கில் உள்ள சிங்கள ஊடகங்கள் இதனை மீண்டும் விடுதலைப் புலிகள் எழுச்சி பெற்றுள்ளதாக கூறி பாரிய பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன.

எனினும் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என கூறப்படுகிறது.

வடக்கில் செயற்படும் கட்சி ஒன்று மேற்கொண்ட கொலைகள் சம்பந்தமாக சுதந்திரமான மற்றும் பக்கசார்பற்ற சட்டவைத்திய அறிக்கைகளை வெளியிட்டதன் காரணமாக அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஈ.பி.டி.பி அமைப்பு மற்றும் கருணா அம்மானுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த மருத்துவருக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.