கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை: ப்ரீமா நிறுவனம் தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ப்ரீமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை என்று ப்ரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று காலை கோதுமை மாவின் விலையை 8.50 ரூபாவினால் அதிகரிக்க ப்ரீமா நிறுவனம் தீர்மானித்ததாக கோதுமை மா விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

நேற்று இரவு முதல் அது நடைமுறைக்கு வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எனினும் நுகர்வோர் அதிகார சபை அதற்கு அனுமதியளிக்கவில்லை.

இந்தநிலையில் கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் எச்சரித்திருந்தார்.

இதனையடுத்து விலையை தாம் உயர்த்தவில்லை என்று ப்ரீமா நிறுவனம் தமது விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.