வவுனியாவில் தேர்தல் கடமை வாகனங்களில் தமிழ்மொழி புறக்கணிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

நாளையதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து 100க்கு மேற்பட்ட அரச மற்றும் தனியார் வாகனங்கள் இன்று காலை முதல் கடமையில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு தேர்தல் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியில் 'தேர்தல் கடமை' என ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் வவுனியா நகரில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியில் தேர்தல் கடமை என வாகனங்களில் ஒட்டப்பட்டமை தொடர்பில் விசனங்கள் வெளியாகியுள்ள.

பாதுகாப்பு பிரிவினர்களில் அதிகளவானவர்கள் பெருன்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதினால் சிங்கள மொழியில் தேர்தல் கடமை என வாகனங்களில் ஒட்டியதாக மாவட்ட செயலக தகவல் தெரிவிக்கின்றன.