தனியார், அரச ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை

Report Print Murali Murali in சமூகம்

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும்.

தூரங்களுக்கு அமைவாக உரிய விடுமுறை தொடர்பில் சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 07வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவுசெய்கின்ற 08வது ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.