நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல சுரேஷ் மீது தாக்குதல் முயற்சி?

Report Print Murali Murali in சமூகம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீது தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் இன்று மாலை பசறை பகுதியில் ஏற்பட்டதாகவும் அதனையடுத்து பதற்றநிலை காணப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சாமர உள்ளிட்டவர்களின் ஆதரவாளர்களால் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.