முறகொட்டாஞ்சேனையில் கோத்தாபாயவின் ஆதரவாளரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைப்பு

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பில் உள்ள பொதுஜன பெரமுன ஆதரவாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - செங்கலடி, முறகொட்டான்சேனைப் பகுதியில் அமைந்துள்ள குறித்த பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இனந் தெரியாத நபர்களினால் குறித்த தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்த விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.