விபத்தில் 16 வயது சிறுவன் பலி

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை பிரதேசத்தில் இன்று அதிகாலை 12.05 அளவில் நடந்த வாகன விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பிரதான வீதியில் புகை பரிசோதனை செய்யும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் கண்டியில் இருந்து வந்த முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த முச்சக்கர வண்டியில் பயணித்த 16 வயதான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியும் மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பதங்கல என்ற இடத்தைச் சேர்ந்த ருச்சிர சங்தீப என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.