யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஏற்படுத்திய வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளன

Report Print Steephen Steephen in சமூகம்

பலாலி மற்றும் பளை பொலிஸ் பிரிவுகளில் இராணுவத்தினர் அமைத்திருந்த சில வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் நேற்று இந்த வீதி தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இராணுவத்தினர் இவ்வாறு வீதி தடைகளை ஏற்படுத்தியது சட்டவிரோதமானது என்பதால், இது குறித்து பொலிஸார், இராணுவ அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து இராணுவத்தினர் சகல வீதி தடைகளையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.