யாழ்.மாவட்டத்தில் புள்ளடி இடுவதற்கு பென்சிலா? பிரச்சினையில்லை

Report Print Sumi in சமூகம்

யாழ்.மாவட்டத்தில் சுண்டுகுழி பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் மற்றும் அதனை அண்மித்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் புள்ளடி இடுவதற்கு பேனைக்கு பதிலாக பென்சில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இது தொடர்பில் யாழ்.மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவினரை தொடர்பு கொண்டு வினவிய போது,

வாக்களிப்பு நிலையங்களுக்கு புள்ளடி இடுவதற்கு பேனை தான் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அது பென்சில் போன்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பில் தேர்தல் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினவிய போது,

பேனை அல்லது பென்சில் இரண்டில் எதுவாயினும் பயன்படுத்தப்பட்டால் அந்த வாக்கு ஏற்றுக்கொள்ளப்படுமெனவும், அந்த வாக்கில் மாற்றங்கள் எதும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தேர்தல் வாக்குப் பெட்டிக்கு அருகில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளதன் காரணமாக எந்தவொரு முறைக்கேடுகளும் நிகழாது எனவும் குறிப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.