மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் லிந்துலை நகர சபை உப தலைவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டு போன்ற மாதிரி வாக்குச் சீட்டுக்களை தம்வசம் வைத்திருந்த தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உப தலைவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நகர சபை உப தலைவர் மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர்.

இதன்போது அங்கு வாக்குச் சீட்டு இணையாள 219 வாக்குச் சீட்டுகளுடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நகர சபை உப தலைவர் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.