போலி வாக்குச்சீட்டுகளுடன் இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
287Shares

மொனராகலை, வெல்லவாய பொலிஸ் பிரிவில் உள்ள வாக்குச் சாவடிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த 25 போலி வாக்குச்சீட்டுக்களுடன் இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்குரிய ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளை சோதனையிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளின் ஆசனத்திற்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 போலி வாக்குச்சீட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது சம்பந்தமாக மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

36 மற்றும் 38 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.