நாட்டில் வெள்ளைவான் கடத்தல்கள் ஓய்ந்து சுமூகமான நிலைஏற்பட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான, வாக்குப் பதிவுகள் இன்றைய நாள் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு -கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய அரசதலைவர் தேர்தலில் மக்கள் அமோகமாக வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். இனியாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுபவர் நிச்சயமாக தமிழ் மக்களுக்கான ஒருஅரசியல் தீர்வை பெற்றுத்தருவதற்கு முன்வரவேண்டும். வெள்ளைவான் கடத்தல்கள் ஓய்ந்து நாட்டில் நல்லதொரு சுமூகமான நிலை ஏற்படவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்றார்.