270 சாராய போத்தல்களுடன் மூவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 270 சாராய போத்தல்களை கொண்டு சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வான்எல பகுதியிலிருந்து கந்தளாய் பகுதிக்கு சாராயப் போத்தல்களைக் கொண்டு சென்ற போதே பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் தினத்தன்று ஜீப் வண்டியில் கொண்டு சென்ற போதே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த மூவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய ஒரு ஜீப், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேர்தலுக்காக நாடு முழுவதும் மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையிலேயே மூவர் கைதாகியுள்ளனர்.