கஞ்சா போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, மொறவெவ பகுதியில் வைத்து கஞ்சா போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் வவுனியாவிலிருந்து கந்தளாய் பகுதிக்கு 2 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் சென்று கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் எனத் தெரியவருகின்றது.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.