வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா விவசாயக் கல்லூரியில் இன்று கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நினைவு தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு நினைவுச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இரத்ததான நிகழ்வு ஒன்று விவசாயக் கல்லுரி மாணவர்களால் நடத்தப்பட்டதுடன், அவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு 11 மாதம் 18ஆம் திகதி வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் சங்கரலிங்கம் கிந்துஜன், சித்திரவேல் கோபிநாத், இராமச்சந்திரன் அச்சுதன், சித்திக்காசன் றிஸ்வான், சுந்தரலிங்கம் ஜங்கரன், திருநாமம் சிந்துஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை நினைவு கூறும் முகமாகவே இந்நினைவு தின நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.