கணவன், மனைவிக்கு இடையில் தாக்குதல்: வீட்டிற்கு தீ வைப்பு

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனை, கண்ணகி புரம் பகுதியில் வீடு ஒன்று அடையாளந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் குறித்த பகுதியில் கணவன், மனைவிக்கு இடையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மனைவி மற்றும் பிள்ளைகள் வசித்து வந்த வீடே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், உடமைகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.