மட்டக்களப்பில் நேற்றிரவு கைக்குண்டு மீட்பு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் கைக்குண்டு ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கைக்குண்டு ஒன்று இருப்பதனை அவதானித்து இது தொடர்பில் தமது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கைக்குண்டு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.