மட்டக்களப்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு: விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு - வாகரை, பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியில் இன்று குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள உவர்மலையைச் சேர்ந்த 64 வயதுடைய கணபதிப்பிள்ளை யோகாம்பிகை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பெண் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள தனது மகளின் வீட்டிலிருந்து, ஆலயம் செல்லவதாகக் கூறி வெளியேறியுள்ளார்.

பின்னர் அவர் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி திருகோணமலைக்கு பயணச்சீட்டுப் பெற்றிருந்த நிலையில் இடை வழியில் பனிச்சங்கேணி வாவிப் பாலத்தடியில் இறங்கியுள்ளார். இதன்போது அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த வேளை, சி.சி.ரிவி கமெராவில் பெண் வாவியில் குதிக்கும் காட்சி பதிவாயிருந்ததாக பிரதேச சடுதி மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் தெரிவித்தார்.

இச்சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.