மட்டக்களப்பு கச்சேரிக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் செய்தவர் கைது

Report Print Dias Dias in சமூகம்

மட்டக்களப்பு கச்சேரிக்குள் அனுமதியின்றி அரச அதிபரின் அறைக்குள் நுழைந்து அடாவடித்தனம் செய்த நபர் மட்டக்களப்பு தலைமையாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணநாதன் விநோஜித் எனும் நபர் இன்று காலை அரசாங்க அதிபரின் அனுமதி இன்றி, அரச அதிபரின் அறைக்குள் நுழைந்து மேசை மேல் ஏறி சுவரில் தொங்க விட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் படங்களை கழட்டி வீசி அடாவடித்தனம் செய்துள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருற்கு அறிவிக்கப்பட்டு குறித்த நபர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, லேக் வீதியில் வசிக்கும் குறித்தநபர் ஏற்கனவே வாக்கு எண்ணும் இடத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார் .

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவிப்பிரமாணம் இன்று இடம்பெற்றிருக்கும் நிலையில் அவரது ஆதரவாளரினால் இந்த சம்பவம் இடம்பெறுள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களை அச்சமடையவும் செய்துள்ளது.

இப்படியான அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு பயந்து தான் தமிழ் மக்கள் கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்கவில்லை என மக்கள் கூறுகின்றனர்.