யாருமற்ற இடத்தில் நான்கு பிள்ளைகளுடன் தனிமையில் துன்பப்படும் தாய்

Report Print Malar in சமூகம்

கஷ்டத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டுச் செல்லும் குடும்பங்கள் ஏதொரு வகையில் மீள எழ முடியாத துயரத்தில் அகப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.

அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பகுதியில் தின்பிலி கிராமத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது.

இங்கு மூத்த மகள் குடும்பகஷ்டத்தால் 11ஆம் வகுப்பிலேயே கல்வியை கைவிட்ட நிலையில், தங்கையின் படிப்பிற்காக தன்னுடைய படிப்பை தியாகம் செய்து வேலைக்கு செல்கிறார்.

2015ஆம் ஆண்டில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு, சிகிச்சை செய்ய போதுமானளவு பணம் இல்லாத காரணத்தினால் தனது கணவரை பறிகொடுத்த நிலையில் தனது வாழ்க்கையை இந்த தாய் நடத்தி வருகின்றார்.

இத்தகைய சூழ்நிலையில் கஷ்டத்தில் தமது வாழ்க்கையை நடத்தும் இக்குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்புவர்கள் கீழ் காணும் தகவலுக்கு தொடர்பினை மேற்கொள்ளலாம்.