போதைப்பொருள் உருண்டைகளுடன் இலங்கை வந்த கென்யா நாட்டு பெண்

Report Print Manju in சமூகம்

கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்த கென்யா நாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் பயணப்பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 30 கொக்கேய்ன் போதைப்பொருள் உருண்டைகளை கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, குறித்த பெண்ணின் வயிற்றில் கொகேய்ன் உருண்டைகள் இருப்பது சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை வௌியில் எடுப்பதற்காக குறித்த பெண் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபரான குறித்த பெண் தொடர்பில் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடயங்களை அறிவித்த பொலிஸார், ஒரு வார காலம் தடுப்புக் காவல் உத்தரவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.