வயல் நிலங்களில் பரவும் எலிக்காய்ச்சல்! பரிதாபமாக இளைஞனொருவர் பலி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர் -முட்டுச்சேனை, மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த திலகநாதன் புவிதரன் (21வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் எலிக்காய்ச்சல்" காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், வயல் வெளிகளில் இவ்வாறான காய்ச்சல் ஏற்படுவதாகவும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் வைத்தியசாலை தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை சடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.