கிளிநொச்சியில் பாற்சோறு பரிமாறிய கேர்ணல் ரத்ன பிரிய

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் இன்றைய தினம் கேர்ணல் ரத்ன பிரிய பந்து தலைமையில் வெற்றி கொண்டாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது கிளிநொச்சி டிப்போ சந்தியில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் பாற்சோறு பரிமாறப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கேர்ணல் ரத்ன பிரிய பந்து கருத்து தெரிவிக்கையில்,

சில மாதங்களுக்கு முன்பதாக வடக்கு, கிழக்கை சேர்ந்த இளைஞர்கள் என்னை சந்திக்க வந்தார்கள். அவர்கள் என்னிடம் கதைக்கும் போது, ஆறு வருடங்களாக எம்முடன் சேவையாற்றிய நீங்கள் எம்மை விட்டு செல்லும் போது உங்களை மீண்டும் எமது பகுதிக்கே தருமாறு கேட்டோம்.

நாங்கள் அவ்வாறு கேட்டது எம்மோடு யுத்தம் புரிந்த தெற்கை வதிவிடமாக கொண்ட ஒரு சிங்கள பௌத்த அதிகாரியை. எமது அந்த கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் தருகின்றார்கள்.

ஆனால் எதனையும் நிறைவேற்றி தர மாட்டார்கள். அதனால் அவர்கள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நாம் கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டனர்.

அதனால் தான் கட்டாயமாக கோத்தபாயவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். அதற்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு பணியாற்றுவோம். விசேடமாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைந்து என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Party wise Results