இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் மன்னார் மக்களுக்கான விசேட சேவை

Report Print Theesan in சமூகம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் மன்னார் மாவட்டத்துக்கான நடமாடும் சேவை எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயமானது எதிர்வரும் 21ஆம், 22ஆம் ஆகிய தினங்களில் நடமாடும் சேவை ஒன்றினை மன்னார் மாவட்டத்தின் முசலி மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலாவது நடமாடும் சேவையானது எதிர்வரும் 21.11.2019 அன்று காலை 9.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் மீள்குடியேற்ற கிராமத்தில் மலங்காடு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது நடமாடும் சேவையானது எதிர்வரும் 22.11.2019 அன்று காலை 9.30 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பக்கடவை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறிப்பிட்ட இந்நடமாடும் சேவைக்கு பிரதேச செயலகங்கள், பதிவாளர் காரியாலயம், காணி ஆணையாளர் காரியாலயம், பொலிஸ் திணைக்களம், வலயக் கல்வி பணிமனை, சிறுவர் நன்நடத்தை திணைக்களம், பிரதேச சபை மகளிர் உத்தியோகத்தர்கள், வனபரிபால திணைக்கள அதிகாரிகள், ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகத்தர் கலந்துகொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.