மட்டக்களப்பு - வாகரை, தட்டுமுனை ஆற்றில் நேற்றிரவு குடும்பஸ்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் சின்னத்தட்டுமுனை வாகரையைச் சேர்ந்த 37 வயதுடைய க.காளிதாஸ் என்பவர் எனத் தெரியவருகின்றது.
அவர் தமது நண்பருடன் வழமை போன்று மீன்பிடிக்கத் தோணியில் நின்றபோது 3 பேர்கள் ஆற்றுக்குள் வந்து கையில் இருந்த கட்டுத் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றதாகவும், அவர்களில் இருவரை தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தமது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் எந்த கட்சியுடனும் தொடர்பற்றவர் என்றும் குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.